மச்ச புராணம்
மச்ச புராணம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்.312, விலை 290ரூ.
திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச புராணத்திற்கு, தனி சிறப்பு உண்டு.
மீன் வடிவெடுத்து, நீர்ப்பிரளயத்தில் இருந்து, இவ்வுலகை காத்தார் என்ற புராணத்தை, எளிய நடையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆன்மிகம் நாட்டம் கொண்டோர், இந்நுால் வாசித்தால், மகிழ்ச்சி அடைவர்.
நன்றி: தினமலர், 10/1/2018