தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ. ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்… ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது. திருமணத்திற்கு […]

Read more

பெண்களும் சோஷலிஸமும்

பெண்களும் சோஷலிஸமும், ஆகஸ்டு பேபல், தமிழில் பேரா.ஹேமா, பாரதி புத்தகாலயம், விலை 380ரூ. நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துககான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

மெய்ப்பொய்கை

மெய்ப்பொய்கை, ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப் பிரியன், கிழக்கு, விலை 300ரூ. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவு செய்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

கொம்மை

கொம்மை, பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 555ரூ. கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின், அவர் எழுதிய, அஞ்ஞாடி நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்று, இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு, அவருடைய, கொம்மை என்ற புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே, வாசகர்கள் இடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர்கள் இரா.காமராசு, சேதுபதி, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், […]

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ. ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய். ஆர். மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. உடல் நலனில், இதயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதய நலனுக்கான, சித்தா மருத்துவ நுால். இதயத்தின் இயக்கம், இதய நோய் வகை, உணவில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை, உடற்பயிற்சி, தியானம் என, பல்வேறு தகவல்கள், இந்நுால் நிரம்பியுள்ளன. இதய நோய்க்கான, சித்தா மருத்துவமுறைகளும், அதை தயாரிக்கும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சித்தா மருத்துவமுறைகளை பின்பற்றுவோருக்கு, இந்நுால் முக்கியமானது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

வலி

வலி, அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், விலை 110ரூ. பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more
1 7 8 9 10