குடியேற்றம்
குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக்.237,விலைரூ.275. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது […]
Read more