குடியேற்றம்
குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ.
ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது.
இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன.
நன்றி: தினமலர், 10/1/2018