தப்புக் கடல

தப்புக் கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக்.192, விலை 150ரூ. ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன் வழியே, அந்நாட்களின் தடங்களையும் பதிவு செய்துள்ளார். தப்புக் கடல முதல், வால் பையன் வரை, 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. சாமானியர்களின் வாழ்க்கையும், சரிந்திரமாகக் கூடும் என்பதை நிரூபித்திருக்கிறார். நன்றி: தினமலர், 20/1/2018

Read more

ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம், போஸ்சில்லி, லயன் காமிக்ஸ், பக்.266, விலை 150ரூ. காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது நன்றி: தினமலர், 20/1/2018

Read more

இந்துத் தத்துவ இயல்

இந்துத் தத்துவ இயல்,  பக்.128, விலை ரூ.105,  பெளத்தத் தத்துவ இயல் – பக்.200; ரூ.165; ஐரோப்பியத் தத்துவ இயல் – பக்.124; ரூ.105; இஸ்லாமியத் தத்துவ இயல் – பக்.206; ரூ.170; விஞ்ஞான லோகாயத வாதம் – பக்.164; ரூ.135; ஐந்து நூல்களையும் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்; அனைத்து நூல்களும் தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, பெளத்தத் தத்துவ இயல் – தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., வரலாறு, தத்துவம், அரசியல் என பலதளங்களிலும் புகழ்பெற்ற நூலாசிரியர், உலக […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள்

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், பக்.240, விலை ரூ.200. அனைத்து எதிர்ப்புகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு விசிஷ்டாத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் ஆழமாய் வேரூன்றச் செய்து இந்து சமயத்தை நிலைநிறுத்தியவர் ராமானுஜர். அவர் வாழ்ந்த 120 ஆண்டு காலத்தில் வைணவத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள், படைத்த சாதனைகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறிப்பாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுதல், அதை தக்க சமயத்தில் அவருக்குத் தெரிவித்து அவரைக் காப்பாற்றுதல் என அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை […]

Read more

மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more

பெண் கல்விப் போராளி மலாலா

பெண் கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை குல்மகை என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல […]

Read more

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, உருவாக்கம் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தமிழில் டி.கே.ரகுநாதன், அடையாளம் பதிப்பகம், விலை 40ரூ. நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது பொதுப் பழக்கமாகவும் நிர்பந்தமாகவும் ஆகியிருக்கிறது. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக்கிறது.‘ நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more
1 5 6 7 8 9 10