லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ், எஸ். விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கடந்த, 70 – 80ம் ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தது. பல நிறுவனங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதில் முன்னணியில் இருந்தது, முத்து காமிக்ஸ். பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற கற்பனை கதாபாத்திரங்களில் வீரதீர சாகச கதைகள், வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வரிசையில், சிவகாசியைச் சேர்ந்த, லயன் காமிக்ஸ் நிறுவனத்தார், ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த […]

Read more

ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம், போஸ்சில்லி, லயன் காமிக்ஸ், பக்.266, விலை 150ரூ. காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது நன்றி: தினமலர், 20/1/2018

Read more

பிணத்தோடு ஒரு பயணம்

பிணத்தோடு ஒரு பயணம், லயன் காமிக்ஸ், விலை 200ரூ. சித்திரக்கதை வரிசையில் மற்றும் ஒரு புது வரவு. பிணத்தைப் புதைப்பதை தொழிலாகச் செய்பவனுக்கும் பணத்துக்காக பிணத்தையும் சுமந்து செல்லச் சொல்லும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம், வழியில் நடக்கும் போராட்டம், முடிவில் சற்றும் எதிர்பாராத திருப்பம். சுவாரசியமாகப் படிக்கும்போது காது பக்கத்தில் தோட்டாக்கள் உரசிச் செல்வதுபோல் உணர முடிகிறது. காமிக்ஸ் பிரியர்கள் கொண்டாட இன்னும் ஒரு பொக்கிஷம். நன்றி: குமுதம், 12/7/2017.

Read more