சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350. ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு […]

Read more

சங்க இலக்கியத்தில் சமூக அறம்

சங்க இலக்கியத்தில் சமூக அறம்,  நந்தினி பதிப்பகம், இரணியன், பக்.132, விலை ரூ.130. சங்க இலக்கியத்தில் சமூக அறம் கட்டுரை உள்ளிட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இயற்கை, வாழ்வியக்கம், சமூக வளர்ச்சி பற்றி இயங்கியல் நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லும் தமிழ்த் தொல்லிலக்கியப் பாடல்களில் இயங்கியல் கூறுகள் கட்டுரை, பகைவரை அழித்து நண்பர்களை உயர்வடையச் செய்ய வேண்டும், வலிமையானவருக்குத் தலைவணங்கி மெலிவானவரை தாழ்த்தக் கூடாது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியத்தில் உள்ளதை எடுத்துக் காட்டும் சங்க இலக்கியத்தில் சமூக […]

Read more

அல்லல் தீர்க்கும் அமிராமி

அல்லல் தீர்க்கும் அமிராமி, க. துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், பக்.340, விலை ரூ.225. சக்தி வழிபாட்டில் பாராயணம் செய்ய, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மிகவும் மந்திரசக்தி வாய்ந்த இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறமுடியும். அம்பிகையின் அருள்பெற்ற அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் அபிராமி பட்டர். இவர், முன்செய் தவத்தாலும், அன்னை அபிராமியின் பெருங்கருணையாலும் ஆட்கொள்ளப்பட்டு, இப்பாமாலையை அருளிச் செய்துள்ளார். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் […]

Read more

இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

கடைசி முகலாயன்

கடைசி முகலாயன், வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் ரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 712, விலை 750ரூ. கடைசி முகலாய மன்னரான ஜாபரின், அரசாட்சி முடிவு வந்த காலத்தை, மிகையின்றி, சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். கடைசி முகலாய மன்னரின் வரலாறு என்பதன் வழியே, அன்றைய காலத்தையும், நெறிகளையும், ஆவணங்கள் துணையுடன் இப்புத்தகத்தில் நிரூபித்து உள்ளார். நன்றி: தினமலர், 20/1/2018.

Read more

ஆசிர்வாதத்தின் வண்ணம்

ஆசிர்வாதத்தின் வண்ணம், அருண்சர்மா, எம். சுசீலா, சாகித்ய அகாடமி, பக். 366, விலை 225ரூ. சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின் உள்ளம், பழக்க வழக்கங்கள், கிராமிய பண்பாடு என, அங்குலம் அங்குலமாக அசாமியர்களின் வாழ்வியலை வர்ணிக்கிறது. வானொலி நிலைய மைய இயக்குனராக இருந்த அருண் சர்மா, இந்நாவலை, சாதாரண இளைஞரின் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினமலர், 11/1/2018.  

Read more

பூனைக்கதை

பூனைக்கதை, பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், பக். 382, விலை 350ரூ. கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள நாவல். ஒரு பூனை எனும் பாத்திரம், இரண்டு உலகங்களை நம் முன் விரிக்கிறது. அந்த உலகத்தின் அரிதார முகங்களை, அந்த பூனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்குள் கதையாய் விரியும் இந்நாவல், நவீன தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும். நன்றி: தினமலர், 11/1/2018.

Read more

படகோட்டி எறும்பு

படகோட்டி எறும்பு, சரவணன் பார்த்தசாரதி, புக் ஃபார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த நேரம் பார்த்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர, இந்த எறும்புகளுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சுவைபடச் சொல்லும் சிறு நுால். சோவியத் கதை புத்தகமான இதில், பக்கத்திற்குப் பக்கம் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், நேரடித்தமிழ் நுால் போன்ற மொழிபெயர்ப்பும், வாசிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. நன்றி: தினமலர், […]

Read more

தம்மபதம் – 8

தம்மபதம் – 8, டாக்டர் என்.ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.445, விலை 280ரூ. இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத் தெரிந்து கொள்’ என்பதாகும் என்கிறார் ஓஷோ. புத்தரின் வழியில் ஆன்மிகம் உரையை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். கேள்வி – பதில் பாணியில், அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமலர், 20/1/2018

Read more
1 4 5 6 7 8 10