தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா, நந்தினி பதிப்பகம், விலைரூ.300. தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகளை சிறிய தகவல்களாக தொகுத்து கூறும் நுால். பத்தி அமைப்புக்கு உட்படாமல் தகவல் அமைப்புடன் உள்ளது. ஒரு தகவல் இரண்டு அடிக்குள் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு குடிமைப்பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு போன்றவற்றுக்கு தயாராவோருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில், இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல், பிற்கால புலவர்கள், உரையாசிரியர்கள், உரைநடை, திறனாய்வு, பெண்ணியம், இதழ்கள், இயக்கங்கள், மாநாடு, […]

Read more

இலக்கியத் தென்றல்

இலக்கியத் தென்றல், உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், விலைரூ.100. பழந்தமிழ் இலக்கியங்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு; மொத்தம் 19 கட்டுரைகள். விவேக சிந்தாமணி, பரிபாடல், மணிமேகலை, குறுந்தொகை, ஏலாதி என பழைய இலக்கியங்கள். அருட்பா, பட்டினத்தார், இடைக்கால பாடல்கள். இணையத்தமிழ் பாரதி எனப் புதிய நோக்கில் கட்டுரைகள்.பசிப்பிணி என்னும் பாவி என, பவுத்த காப்பியமான மணிமேகலையில் உள்ள வரிகள் பசியின் கொடுமையை கூறும். இது மாதிரி கருத்தமைந்த பாடல்களை எடுத்துக் காட்டி விளக்குகிறார். பல்கலை மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன் நன்றி: […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், விலை 150ரூ. ஒவ்வொரு விநாடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட இளைஞி சோபியாவின் கதையாக எளிய நடையில் நகரும் நாவல். சோபியா யார் எனத் தெரியும் இடத்தில் அறிவியல் புதினமாக புதுமலர்ச்சி பெறுகிறது. கதை என்பதைவிட பாதிக்கப்பட்ட, படுகின்ற பெண்களின் போர்க்குரலாகவே ஒலிக்கிறது. படித்து முடித்ததும் இரக்கமும், ஈனர்கள் மேல் சினமும் ஒரு சேரத் தோன்றுவது நிதர்சனம். நன்றி: குமுதம், 7/8/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150. நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது. கூட்டு பாலியல் […]

Read more

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!, கோ.தியாகராஜன், நந்தினி பதிப்பகம், பக். 80, விலை 90ரூ. திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 10/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக்.160, விலை 80ரூ. இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும், கவிதைகளாக, காவியங்களாக வெளிவந்தன. அவை காலமாற்றத்தால், நவீன இலக்யி வெளிப்பாட்டால், கட்டுரைகளாக உருமாற்ற துவங்கின. இந்த ஆய்வு புத்தகத்தில் பெண்யிம், திருக்குறளில் கல்வி, சிலப்பதிகாரம் காட்டும் மானுட விழுமியங்கள் உள்ளிட்ட, பல ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

சங்க இலக்கியத்தில் சமூக அறம்

சங்க இலக்கியத்தில் சமூக அறம்,  நந்தினி பதிப்பகம், இரணியன், பக்.132, விலை ரூ.130. சங்க இலக்கியத்தில் சமூக அறம் கட்டுரை உள்ளிட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இயற்கை, வாழ்வியக்கம், சமூக வளர்ச்சி பற்றி இயங்கியல் நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லும் தமிழ்த் தொல்லிலக்கியப் பாடல்களில் இயங்கியல் கூறுகள் கட்டுரை, பகைவரை அழித்து நண்பர்களை உயர்வடையச் செய்ய வேண்டும், வலிமையானவருக்குத் தலைவணங்கி மெலிவானவரை தாழ்த்தக் கூடாது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியத்தில் உள்ளதை எடுத்துக் காட்டும் சங்க இலக்கியத்தில் சமூக […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், பக். 328, விலை 240ரூ. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வந்துள்ளது. இஸ்லாமிய மெய்யியல், திருக்குர் ஆனின் அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. திருக்குர்ஆன் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், ஆழமான ஆய்வாக உள்ளது. சமயத் திருமறைகளை விஞ்ஞான மனநிலையில் நின்று ஆராய்ந்துள்ளார். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more
1 2