கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், விலை 150ரூ. ஒவ்வொரு விநாடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட இளைஞி சோபியாவின் கதையாக எளிய நடையில் நகரும் நாவல். சோபியா யார் எனத் தெரியும் இடத்தில் அறிவியல் புதினமாக புதுமலர்ச்சி பெறுகிறது. கதை என்பதைவிட பாதிக்கப்பட்ட, படுகின்ற பெண்களின் போர்க்குரலாகவே ஒலிக்கிறது. படித்து முடித்ததும் இரக்கமும், ஈனர்கள் மேல் சினமும் ஒரு சேரத் தோன்றுவது நிதர்சனம். நன்றி: குமுதம், 7/8/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150. நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது. கூட்டு பாலியல் […]

Read more