இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்,  ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம்,  பக். 136, விலை ரூ.130. சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது […]

Read more