அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும், ப.கு.ராஜன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 545. அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக்கூடாது என்று எழுதினார் ஐன்ஸ்டீன். புரட்சியில் பகுத்தறிவு என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல் அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம், அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை […]

Read more