கொலம்பசின் வரைபடங்கள்
கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ. மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் […]
Read more