ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 208, விலை 200ரூ. இது தந்தையர் நாடு ஹிட்லர், கார்ல் மார்க்ஸ், ஜன்ஸ்டைன் இவர்களை நினைக்கும்போது, ஜெர்மனியை நினைக்காமல் இருக்க முடியாது. ஜெர்மனி இயற்கை வளம் மிக்க நாடு. ரைன், டான்யூப் நதிகளாலும், கருங்காடு போன்ற இயற்கைச் செல்வங்களாலும் தன்னிறைவும் தன்னம்பிக்கையும் பெற்ற நாடு. எல்லை அற்ற தொழில் வளம் அதன் முதுகெலும்பு. கால தேச வர்த்தமானங்களால், வாழ்வியல் போக்குகளால், இரு பெரும் உலகப் போர்களுக்கு ஒரு வகையில் காரணமாகவும், பேரளவுக்குக் களங்கமாகவும் […]

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ. ‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 224, விலை 170ரூ. பாட்டு திறத்தால் பாரதம் பேணியவர்கள் பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி. சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ. சேதுபதி. […]

Read more