தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும், தொகுப்பு: நொபோரு கராஷிமா, தமிழில்: ப.சண்முகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம். விலை: ரூ.700 தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட் படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது […]

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு, மிகையீல் நைமி, தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை: ரூ.150. தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்… இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், […]

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆனந்த் கிரிதரதாஸ், தமிழில்: அவைநாயகன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.360, விலை ரூ.300. 1970 – களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நாட்டில் கிளீவ்லாந்தின் ஓஹியோ புறநகர்ப் பகுதிக்கு குடி பெயர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நூலாசிரியரான ஆனந்த் கிரிதரதாஸ். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும், அவருள்ளே இந்திய மண்ணின் மீதான தாகம் எப்போதும்நிறைந்திருந்ததால், அமெரிக்காவில் இருந்த மெக்கின்சி நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார். வேலை தொடர்பாகவும், தன் ஆர்வத்தின் காரணமாகவும் இந்தியாவின் பல […]

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு,  மிகையீல் நைமி, மலையாளத்தில் எம்.ஏ.அஸ்கர், தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்,  பக். 160,  விலை ரூ.150. கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய இளம் வயதில் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அவர் குடும்பம் இடம் பெயர்கிறது. மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்த சிறுவனான கலீல் ஜிப்ரான், ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவராக இருக்கிறார். ஓவியக் கண்காட்சி நடத்துகிறார். எனினும் ஓவியம் வரைவதற்கான அதே மனநிலை அவரைக் கவிதை எழுதவும் வைக்கிறது. சிறந்த சிறுகதைகளையும் எழுதுகிறார். […]

Read more

ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை, தமிழில் மொழிபெயர்ப்பு பேராசிரியர் ச.வின்சென்ட், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பக்.222, விலை 150ரூ. உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ கோய்லோ. இவர் எழுதிய, ‘ரசவாதி’ என்ற நுால், 81 மொழிகளில், எட்டு கோடியே முப்பது லட்சம் பிரதிகள் விற்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய, ‘ஐந்தாம் மலை’ என்ற நாவல், விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. தத்துவ பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில், எளிதாக மொழிபெயர்த்து தந்துள்ள பேராசிரியர் ச.வின்சென்ட் பாராட்டுக்குரியவர். […]

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 208, விலை 200ரூ. இது தந்தையர் நாடு ஹிட்லர், கார்ல் மார்க்ஸ், ஜன்ஸ்டைன் இவர்களை நினைக்கும்போது, ஜெர்மனியை நினைக்காமல் இருக்க முடியாது. ஜெர்மனி இயற்கை வளம் மிக்க நாடு. ரைன், டான்யூப் நதிகளாலும், கருங்காடு போன்ற இயற்கைச் செல்வங்களாலும் தன்னிறைவும் தன்னம்பிக்கையும் பெற்ற நாடு. எல்லை அற்ற தொழில் வளம் அதன் முதுகெலும்பு. கால தேச வர்த்தமானங்களால், வாழ்வியல் போக்குகளால், இரு பெரும் உலகப் போர்களுக்கு ஒரு வகையில் காரணமாகவும், பேரளவுக்குக் களங்கமாகவும் […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, பேரா.க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை 100ரூ. ஐன்ஸ்டைனைப் புரிந்துகொள்ளலாம் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியாகி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் நவீன இயற்பியலில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்குமான கருவியாகத் திகழ்கிறது. படித்தவர்களுக்குக்கூட எளிதில் புரியாதென்று கூறப்படும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை எளிய முறையில் விளக்கும் சவாலை இந்த நூல் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ நூலின் மொழிபெயர்ப்பு இது. தூரம், காலம், அளவு ஆகியவை […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.104, விலை ரூ.100. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிகவும் எளியமுறையில் விளக்கும் நூல். இடம், வலம், மேலே, கீழே, சிறியது, பெரியது, அதிக தூரம், குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம், இடம்சார்புடையவை. திசை சார்புடையது. பேரண்டப் பிறப்பு, முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு போன்றவற்றை சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் […]

Read more