ஜெர்மனி
ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 208, விலை 200ரூ.
இது தந்தையர் நாடு
ஹிட்லர், கார்ல் மார்க்ஸ், ஜன்ஸ்டைன் இவர்களை நினைக்கும்போது, ஜெர்மனியை நினைக்காமல் இருக்க முடியாது. ஜெர்மனி இயற்கை வளம் மிக்க நாடு. ரைன், டான்யூப் நதிகளாலும், கருங்காடு போன்ற இயற்கைச் செல்வங்களாலும் தன்னிறைவும் தன்னம்பிக்கையும் பெற்ற நாடு.
எல்லை அற்ற தொழில் வளம் அதன் முதுகெலும்பு. கால தேச வர்த்தமானங்களால், வாழ்வியல் போக்குகளால், இரு பெரும் உலகப் போர்களுக்கு ஒரு வகையில் காரணமாகவும், பேரளவுக்குக் களங்கமாகவும் இருந்த ஜெர்மனி, கிழக்கென்றும், மேற்கென்றும் பெர்லின் சுவரை இடை வைத்துப் பிளவுற்று இருந்ததும், பின்னர் தடை உடைத்து தற்போது ஒரு நாடாய் திகழ்வதும் அதன் பொதுவான வரலாறு. தந்தையர் நாடாம் ஜெர்மனியில் ஒற்றுமை, நீதி மற்றும் விடுதலை ஓங்கிடப் போராடுவோம் என்பது ஜெர்மனி தேசிய கீதத்தில் வரும் முக்கியமான வரி. ஜெர்மனியின் நகரங்களில் ஒன்றான பெர்லினில் திரைப்பட விழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். கருங்காடு, கொலோன் கதீட்ரல், ரைன் பள்ளத்தாக்கு, mimiature wonderland போன்ற பார்க்கத் தகுந்த இடங்கள் பரவசமூட்டுபவை.
கவி மாமன்னர் கதே (1749-1832), கார்ல் மார்க்ஸ் (1818-1881), இசைவாணர் பெத்தோவன் (1770-1792), மாக்ஸ் முல்லர் 91823-1900) போன்ற ஜெர்மானியப் பெரியார்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். ஏறக்குறைய 60 ஆயிரம் தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றனர்.
படுக்கை – சோம்பேறி மனிதனின் சிறைச்சாலை என்ற ஜெர்மன் பழமொழி தூங்காதே! தம்பி தூங்காதே! நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவூட்டுகிறது.
ஜெர்மனியின் தேசிய கீதத்தைப் படித்ததாலோ என்னவோ, பாரதி பாரதத்தை – ‘எங்கள் தந்தையர் நாடு’ என்று பாடினார். இதுபோன்ற பல பொன்னான தகவல் தரும் இந்த நூல் ஒரு பயண இலக்கியப் புதையல்!
-எஸ்.குரு.
நன்றி: தினமலர், 11/3/2018,
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026796.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818