சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி
சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, பேரா.க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை 100ரூ.
ஐன்ஸ்டைனைப் புரிந்துகொள்ளலாம்
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியாகி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் நவீன இயற்பியலில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்குமான கருவியாகத் திகழ்கிறது.
படித்தவர்களுக்குக்கூட எளிதில் புரியாதென்று கூறப்படும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை எளிய முறையில் விளக்கும் சவாலை இந்த நூல் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ நூலின் மொழிபெயர்ப்பு இது. தூரம், காலம், அளவு ஆகியவை திட்டவட்டமானவையல்ல ஒன்றுக்கொன்று சார்புடையவை என்பதை எளிய முறையில் விளக்கி ஆரம்பிக்கிறது இந்தப்புத்தகம்.
ஐன்ஸ்டைன் தனக்கு முன்பிருந்த ஐசக் நியூட்டனின் முடிவுகளை எப்படி மறுவரையறை செய்தார் என்பதையும் புரியும்படி கூறுகிறது. தத்துவம், கலை, சினிமா, போர்த் தொழில்நுட்பம் என 20-ம் நூற்றாண்டில் பல துறைகளையும் பாதித்த சார்பியல் கோட்பாடு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெரியவர்களும் தெரிந்துகொள்வதற்குக் கையடக்கமான நூல் இது.
நன்றி: தி இந்து, 9/1/2018.