கல்வி ஓர் அரசியல்
கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ.
எவ்வகையான கல்வி தேவை?
மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் மாணவர்களின் சமூக அக்கறையை எப்படிக் கூர்மைப்படுத்தலாம், ஜனநாயகத்தை எவ்வாறு பரவலாக்கலாம் என்பன பற்றியும் வசந்திதேவி தன் கட்டுரைகள் மூலம் இப்புத்தகத்தில் விவாதித்திருக்கிறார்.
பெண்ணியக் கல்வி, மனித உரிமைக் கல்வி, தலித் கல்வி போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆழமாக உரையாடல் இப்புத்தகம். கல்விக் கொள்கைகள் குறித்தும் அதன் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் குறித்தும் தமிழில் மிக முக்கியமான பதிவு.
நன்றி: தி இந்து, 9/1/2018.