நம் காலத்து நாயர்கள்
நம் காலத்து நாயர்கள், சைபர் சிம்மன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 140ரூ.
புதிய உலகம் படைத்தவர்கள்!
நம்முடைய வசிப்பிடமும் பணியிடமும்தான் நம் உலகம் என்ற நிலையிலிருந்து புதிய அன்பர்களையும், ஏகப்பட்ட தகவல்களையும் இணைய உலகம் இன்று சாத்தியமாக்கிவருகிறது.
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க் டு – இன் என சர்வதேசத் தொலைதொடர்புக்கு பல வலைத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாளிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் யார், அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் நமக்குத் தெரியாது.
இவை அனைத்தும் நம் தலைமுறையினராலே கண்டுபிடிக்கப்பட்டவை. அப்படிப்பட்ட நாயக்கர்களை அறிமுகம் செய்வதுடன் அவர்களைப் பற்றிய சுவாரசியமான கதைகளைக் கூறுகிறது இந்நூல்.
நன்றி: தி இந்து, 9/1/2018.