கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு
கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு, மிகையீல் நைமி, தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை: ரூ.150.
தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்…
இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை.
உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், ‘மிர்தாதின் புத்தகம்’ நூலாசிரியராகப் புகழ்பெற்றவர். கவிதைக்கும் ஓவியத்துக்கும் இடையே அலைக்கழிந்த ஜிப்ரானின் வாழ்க்கையையும் மனவோட்டங்களையும் காவியமாக்கியிருக்கிறார் நைமி.
அரபி மூலத்திலிருந்து மலையாளம் வழி தமிழுக்கு வந்திருக்கும் இந்நூல், ஜிப்ரானில் திளைப்பவர்கள் தவறவிடக் கூடாத ஒன்று.
– பி.எஸ்.கவின்
நன்றி: தமிழ் இந்து, 14/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818