கடோபநிஷத்

கடோபநிஷத்,க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை ரூ. 350. உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119 மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத் தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த விளக்கவுரை. விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான் அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ். மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக் கூறுகிறார் எமதர்மன். தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை […]

Read more

மனம் அது செம்மையானால்

மனம் அது செம்மையானால்? ,  க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160,  விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்? , க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160, விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு.

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு., க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.170, விலை ரூ. 150. உலகில் உயிரினம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரினம், பலவித பரிணாமங்களை அடைந்து இன்றைய மனித வடிவை அடைந்திருக்கிறது என்பது பரிணாமக் கொள்கை.,ஆயினும் இதை மறுதலிப்பவர்களும் உண்டு. உலகம் உருண்டை என்பதை ஏற்கவே பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு பொது சார்பியல் கோட்பாடு உருவாகி இன்றைய நவீன உலகிற்கு வழி சமைத்தது. அதேபோல டிஎன்ஏ மூலக்கூறுகள் குறித்த […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. உயிர் எப்படித் தோன்றுகிறது என்பது பற்றிய ஆர்வம் மனிதரிடம் பிறந்த எப்படி, வளர்ந்தது எப்படி, நகூன உயிரியல் இது பற்றி என்ன கருத்தை முன்வைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக வழங்குகிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.106, விலை ரூ.50. மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது. பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102,  விலைரூ.120. நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர். காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது […]

Read more

தத்வமஸி

தத்வமஸி – மகாவாக்கிய விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.112, விலை ரூ.150. உன்னத ஞானம் – மோட்சம் கிட்டச் செய்யும் தத்துவ சிந்தனைக்கு வழி வகுக்கிற சொற்றொடர் மஹாவாக்யம் என்று அறியப்படுகிறது. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் ஏராளமான மஹாவாக்யங்கள் காணக் கிடைக்கின்றன. இவை உயரிய ஞானத்தைப் பெற எளிய வழியாகக் கருதப்படுகின்றன. வேதத்துக்கு ஒன்று என்ற அளவில், ஹைந்தவ தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறிப்பிடத்தக்கவையான, பரவலாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மஹாவாக்யங்கள் நான்கு பிரஜ்ஞானம் பிரஹ்மா என்கிற மஹாவாக்யம், ரிக் வேதத்தில் அடங்கிய ஐதரேய […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.64, விலை ரூ.100. அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள். ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் […]

Read more

காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது

காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.264, விலை ரூ.200. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் என்கிற நூலை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட நூல் இது. சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட பல கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த அகிலத்தின் தோற்றம் எப்படி ஏற்பட்டது? அதன், தன்மை குறித்து கி.மு.340 காலத்தில் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில், இந்திய விஞ்ஞானி பாஸ்கரா, தாலமி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், நியூட்டன் , ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல […]

Read more
1 2