நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102,  விலைரூ.120.

நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது புலன்களும் புத்தி முதலான அகக் கரணங்களும் அவனது இஷ்டப்படி பயன்படுத்தும் பூரண சுதந்திரமாக உள்ளன.

நான் பாதுகாப்பற்றவன் என்ற சுயமதிப்பீடுதான் மனிதனைப் பணம், பொருள், செல்வாக்கு, வசீகரத்தைத் தேடி அலைய வைக்கிறது. எவன் இந்த சுயமதிப்பீட்டில் இருந்து விடுபடுகிறானோ, அவனே முழுமையான பூரண விடுதலை உணர்வை கொண்டவன். அந்த பூரண விடுதலையே முக்தி, மோட்சம் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

பிரபஞ்சத்துக்கு தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை. ஆகாயம் என்ற அண்டவெளி வேகமாக தொடர்ந்து விரிந்துகொண்டேயிருக்கிறது. இந்த ஆகாயவெளியில் இன்னதென்று விளக்க முடியாததோர் ஆதி சக்தி நிறைந்திருக்கிறது. இந்த சக்தி துகள்களாகவும், ஆற்றலாகவும் பிரிந்து உரசி உறவாடி அணுக்களாகவும், அணுக்கள் திரண்டு நட்சத்திரங்களாகவும், கேலக்ஸிகளாகவும் விரிந்துகொண்டே இருப்பதற்கு முடிவு இல்லை. கடவுள் பிரபஞ்சமாகத் தோற்றம் கொண்டு நிலைத்து நிற்கிறார். கடவுள் வேறு, பிரபஞ்சம் வேறல்ல என்பதே வேதாந்தத்தின் முடிவு என்கிறார் நூலாசிரியர்.

நன்றி: தினமணி, 6/5/2019.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *