கடோபநிஷத்
கடோபநிஷத்,க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை ரூ. 350. உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119 மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத் தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த விளக்கவுரை. விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான் அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ். மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக் கூறுகிறார் எமதர்மன். தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை […]
Read more