ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

2020 ஆண்டுக்கு அப்பால்

2020 ஆண்டுக்கு அப்பால், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன், தமிழில் சிற்பி, டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 312, விலை 180ரூ. இந்த நூலை, கலாமின் இந்தியா 2020 என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே கலாம் காலமாகிவிட்டார். இதில் 2014ல் இந்தியா என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவில் முடியுமா? என்ற தலைப்பு வரை, மொத்தம் 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, நான்கு குறிக்கோள்களை, நூலாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அவற்றின் விவரம் […]

Read more