2020 ஆண்டுக்கு அப்பால்
2020 ஆண்டுக்கு அப்பால், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன், தமிழில் சிற்பி, டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 312, விலை 180ரூ.
இந்த நூலை, கலாமின் இந்தியா 2020 என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே கலாம் காலமாகிவிட்டார். இதில் 2014ல் இந்தியா என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவில் முடியுமா? என்ற தலைப்பு வரை, மொத்தம் 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, நான்கு குறிக்கோள்களை, நூலாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அவற்றின் விவரம் 1. நகர்ப்புறங்கள், நாட்டின் 60 லட்சம் கிராமங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதற்காக தேசிய நீராதார தொகுப்பமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் – குறிப்பாக நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கு பொருளீட்டும் திறனை உருவாக்க வேண்டும். 3. இந்தியாவின், 600 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆற்றலைப் படைத்துத் தர வேண்டும். 4. மகத்தான குடிமக்களை பொருளீட்டும் திறன் அல்லது அறிவு ஈட்டும்திறன் கொண்டோராக, நல்ல மனிதர்களை வார்த்தெடுத்தல். நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. -விகிர்தன். நன்றி: தினமலர், 1/11/2015.