வானம்பாடி
வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ.
கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு செய்துள்ளார்கள். தலையங்கம், நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்புகள், செய்திகள் எல்லாமே இதில் அடக்கியிருப்பது சிறப்பு. மரபுக் கவிதையின் சிறப்பையும் தமிழ் இலக்கியச் சிறப்பையும் வெளியுலகம் உணர்ந்துகொள்ள இத்தொகுப்பு உதவும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2015.
—-
கிளையிலிருந்து வேர் வரை, ஈரோடு கதிர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 150ரூ.
சமூகத்தின் நிகழ்வுகள் இவரது பார்வை வழி உட்கொள்ளப்பட்டு எழுத்தாக வெளிச்சம் கொடுத்து காட்சிப்படுத்தும் ஒரு தொகுப்பாகவே இந்நூல் விளங்குகிறது. எல்லாமே பருந்துப் பார்வையில் உள்வாங்கியவை. அதனால் எங்கோ எப்போதே நடந்தவற்றை எதனெதனுடனோ ஒப்பிட்டுப் பார்க்கும் லாகவம் தெரிகிறது. இருந்தாலும் தலைமுறை இடைவெளியின் தவிப்பை இவருக்குத் தெரிந்த நியதிகளில் மட்டுமே நியாயம் சொல்வது ஒரு சார்புத் தன்மையாகப்படுகிறது. என்றாலும் பிள்ளைகள் தன் தந்தையிடம் எதிர்பார்க்கும் தாயுமானவனாதல் தொடங்கி உணவையும் தண்ணீரையும் வீணாக்காத சமூகத்தை உருவாக்க கதிர்காட்டும் திணிக்கப்படும் பசி வரை ஒரு சக மனிதர் மீதான அன்பும் அக்கறையும் படிப்போருக்கும் வைகவர உதவும் எழுத்துக்கள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2015.