சீனாவின் கொரோனா அரசியல்
சீனாவின் கொரோனா அரசியல், கோலாகல ஸ்ரீநிவாஸ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 68, விலை 70ரூ.
மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.
வைரஸால், 184 நாடுகள் பாதிக்கப்பட்டது, உயிரி ஆயுதமாக கொரோனா வைரசை தயாரித்தது சீனா தான் என, பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன.
தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனியில் நஷ்ட ஈடு கேட்டு எழுந்த குரல்கள், வூஹானில் உள்ள, ‘லெவல் – 4’ ஆய்வகத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது என, சீனாவின் கிரைம் பட்டியலை ஆதாரங்களுடன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். 2019, டிச., 8ல் வூஹானில் முதல் நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.
அதிலிருந்து துவங்கிய ஆய்வுகள், தர்க்கங்கள், கேள்விகள், பிற நாடுகளின் வாதங்கள் என புலன் விசாரணை செய்துள்ளார். இந்த புத்தகத்தை படிக்கும் போது, சீனாவின் ஒட்டு மொத்த ஆதிக்க மனப்பான்மையும், உயிரி ஆயுதத்தின் மூலம் உலகை அசைத்து பார்க்க நினைத்த அதிகாரத் திமிரும் புலப்படும். இந்த ஆய்விற்காக, ஆசிரியர் மெனக்கெட்டுள்ளதை பக்கத்திற்கு பக்கம் பார்க்க முடிகிறது.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர், 9/8/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818