என்ட அல்லாஹ்

என்ட அல்லாஹ், தொகுப்பு: ஏபிஎம்.இத்ரீஸ், ஆதிரை வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: 180 இலங்கை உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்தப் போர், 2009-ல் அதன் உச்சம் தொட்டது. இலங்கையிலிருந்து உலகம் முழுக்க நிலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் பலரும் போரின் விளைவுகள் குறித்துக் காத்திரமாகத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். தமிழ் இலக்கியம் உலகம் முழுக்கப் பரவியதற்கு ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட போருக்குப் பிறகும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீசிவிடவில்லை. அதிலும், ஈழம் […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. தமிழ் சினிமாவில் புதிய நடைமாற்றத்தை வழங்கியவர் இயக்குனர் மகேந்திரன். வணிக சினிமா வந்தபோதும், திரைமொழி இலக்கியமாக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தவர். திரைப்படங்கள் மீது வைத்திருந்த காதலை, திரைத்துறையைச் சேர்ந்த, 56 பேர் எழுதி உள்ளனர்.நடிகர் ராஜேஷ், ‘சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பார். கமர்சியல் சினிமாக்களை கேலி செய்வார். ஒரு ஆள், 10 பேரை துாக்கி அடிப்பது போன்ற காட்சியை பார்த்து சிரிப்பார்… ‘ஒரு நடிகர், […]

Read more

நீதிமன்றமும் அறமும்

நீதிமன்றமும் அறமும், டாக்டர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஊழல் ஓழிப்போர் கூட்டமைப்பு, பக். 160, விலை 150ரூ. படித்தவர்களிடம் கூட போதிய சட்ட அறிவு இன்மையால், வழக்குரைஞர்களிடம் சிக்கி நீதி கிட்டாமல் நிம்மதி இழப்பதையும், சட்டத் திரித்தல் மலிந்து அநீதிக்குச் சாதகமாக தீர்ப்புகள் உள்ளதையும் உதாரணங்களோடு வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நுால். நீதிமன்றங்களில் பெற்ற அனுபவங்களைத் தொகுத்தளித்திருக்கிறார். அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுநல வழக்குகள் தொடர்ந்த போது கிட்டிய அவமானங்களை கேள்விகளால் ஆராய்ந்துள்ளார். சட்டப்பிரிவுகளின் இருள் பொதிந்த இடைவெளிகளை வெளிச்சம் போட்டுக்காட்ட முற்படுவதோடு, அறம் […]

Read more

உள்ளங்கையில் ஐம்பது வானம்

உள்ளங்கையில் ஐம்பது வானம், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக் 168, விலை 150ரூ. கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் குரலாக வெளிப்படுகிறது. பெண் என்னும் பெருந்தவத்தின் மகிமைகளையும், வீறுணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ஆழமாக உணர்த்தும் கவிதைகள் அலங்கரிக்கின்றன. பெண்கள் எல்லாவித முன்னேற்றத்திற்கும், புரட்சிகர சிந்தனைக்கும் தயார்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்படியான கவிதைகள் வரவேற்புக்கு உரியன. – ராம.குருநாதன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ. இராகவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 168, விலை 160ரூ. தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு, கடல் கடந்து சென்ற இந்தியக் கலைகள், சாவகத்தில் உண்டான கலை வளர்ச்சி எனத் தமிழகக் கலையும் தமிழர்களோடு பயணித்த வரலாறும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.கட்டடக்கலை, சிற்பக்கலை, சமயம், கூத்து எனப் பல கலைகளில் தமிழர்களுடன் சாவர்கள் ஒத்துள்ள தன்மையை இந்நுால் வெளிக் கொணர்ந்துள்ளது. தமிழகம் உலக மக்களின் தாயகம். தமிழர்களுக்கு உலகிலுள்ளோர் யாவரும் […]

Read more

கல்குதிரை

கல்குதிரை, ஆசிரியர்: கோணங்கி, விலை: ரூ.375 தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கும் பெரும்பாலானவர்களின் எழுத்துகளோடு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் அரிதான சிறுபத்திரிகைகளில் ஒன்று ‘கல்குதிரை’. அச்சு ஊடகம் நலிவில் இருக்கிறது என்று சொல்லப்படும் காலத்தில் அதே கனத்துடன் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலம் போன்ற காலத்தில்தான் ‘கல்குதிரை’யை முழுமையாக வாசிக்கவும் முடியும். கவிதை, விமர்சனம், நாவல், சிறுகதை எனத் தமிழிலும் சர்வதேச அளவிலும் நடந்துகொண்டிருக்கும் சலனங்களை ‘கல்குதிரை’ மூலம் நாம் உணர முடியும். இந்த இதழின் பிரதானப் படைப்புகளில் ஒன்று என […]

Read more

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள், செ.சண்முகசுந்தரம், அன்னம் வெளியீடு, விலை: ரூ.150 சாதியாலும் வர்க்கத்தாலும் ஒருசேர வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வெண்மணி மக்களின் வரலாற்றுக் குறிப்புகள்தான் செ.சண்முகசுந்தரம் எழுதிய ‘அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ நூல். இந்த அரை நூற்றாண்டுகளில் காலம் எத்தனையோ நிகழ்வுகளைக் கடந்துபோயிருக்கிறது. கால மாயம் தன்னுள் பல காயங்களைக் கரைத்துவிட்டபோதும், இந்த வெண்மணித் தீ மட்டும் இன்னும் அணையாமல் தகிப்போடு கனன்றுகொண்டே இருக்கிறதே ஏன்? ஏனென்றால், அதன் அடியில் இருக்கும் காரணிகள்தான். அவை அரை நூற்றாண்டு கடந்த பிறகும் […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள், ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.150 கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது. ‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க […]

Read more

இலக்கிய ஆளுமைகள்

இலக்கிய ஆளுமைகள், மு. விவேகானந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150 அறிஞர்களின் ஆளுமைகளை முன் நிறுத்தும் நுால். பாரதியும் இதழ் இயலும் என்ற கட்டுரை, எழுதுகோலும் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்பதை நிரூபிக்கிறது. சுதேசமித்திரன் துணை ஆசிரியராக, 17 ஆண்டுகள் அவர் எழுதுகோல் ஓயவில்லை. கேலிச் சித்திரம் வெளியிட்டவர். வாசகர் அனுப்பும் செய்திகளுக்கு சன்மானம் கொடுத்தது முதன் முதலில் பாரதி தான். சிறுகதை உலகின் சிகரத்தை எட்டிய புதுமைப்பித்தன் பற்றிய ஆளுமைக் கட்டுரை மிகவும் அருமை. சிறுகதை என்றால் சிக்கல், பின்னல், எழுச்சி, முடிவு இவற்றுக்கு […]

Read more

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல்

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலா, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 தேர்தல் குறித்த கருத்துகளை 1980-களின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிவரும் நிபுணர் பிரணாய் ராய், கள ஆய்வு நிபுணர் தொராய் ஆர்.சொபாரிவாலா இருவரும் இணைந்து இந்தியாவின் தேர்தல்கள் குறித்த சிறந்ததொரு நூலை எழுதியிருக்கின்றனர். ‘தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற பெயரில், ச.வின்சென்ட்டின் தமிழாக்கத்தில் இப்போது ‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கிறது. இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, பல்வேறு பிரிவு சமூகத்தினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு […]

Read more
1 2 3 4 5 6 8