உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், தி.ஜானகிராமன், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி […]

Read more

சைவ சமயம்

சைவ சமயம், மா.இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலைரூ.100 சைவ சமயம் பற்றி அறிமுகம் செய்யும் நுால். சமயம் என்பது சமைத்தல் எனும் வேர்ச்சொல்லில் பிறந்தது என்கிறார். வாழ்வை பக்குவமடையச் செய்தல் என்ற பொருளில் கூறுகிறார். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக, சைவ சமயத்தை அணுகி, தகவல்களை பதிவு செய்துள்ளார். சங்க காலத்துக் கோவில்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். கால எல்லையை கடந்து பார்க்கும் நுால். – த.பாலாஜி. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030647_/ […]

Read more

தமிழகக் கலைகள்

தமிழகக் கலைகள், மா. இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலை ரூ.100. ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார். நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல […]

Read more

கல்யாணி

கல்யாணி, வல்லிக்கண்ணன், காவ்யா பதிப்பகம், ரூ.580. படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால். கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது! – எஸ்.குரு. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி

பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை ரூ.300 ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், மணிலா நகரிலிருந்து வேரித்தாஸ் வானொலியில், 1976 முதல், தமிழ்க் குரல் ஒலிக்கத் துவங்கியது. சுமையான பெரிய வால்வு ரேடியோ குறைந்து, டிரான்சிஸ்டர் வரத் துவங்கிய காலம் அது. நீண்டநேரம் காத்திருந்து, இந்த வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டவர்கள் பலர். அழகிய தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இன்றைய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்போருக்கு பெரும் பாடம். இன்றைய தொகுப்பாளர்கள், அந்த குரலை கேட்டு படிக்க வேண்டும்.அப்போது தான், எவ்வளவு […]

Read more

வைசூரி நோய் மருத்துவம்

வைசூரி நோய் மருத்துவம்,  எஸ்.சிதம்பர தாணுப் பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்டரேச்சர் ரி சர்ச் சென்டர், விலைரூ.350 மனித இனத்தையும், பருவ காலங்களையும் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாது. பருவ கால மாற்றங்கள், மனித நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற மக்களைப் பலவகையிலும் வாட்டி வதைப்பது வைசூரி நோய். அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என, விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 64 வகை வைசூரி நோய்கள் விளக்கப்பட்டுள்ளன. வைசூரிக்கான காரணம் துவங்கி, நோயின் தன்மை, அறிகுறி, வீரிய விளைவு, பின் விளைவு, மருத்துவ […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலைரூ.500. கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால். கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய […]

Read more

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, கிஷோர் பிரசாத், பாரதி புக் ஹவுஸ், பக். 108, விலை 60ரூ. மகாத்மாவின், 150ம் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நூல். காந்தியின் அரிய புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் அவை அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டி, மனதில் எழுச்சி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மகாத்மா என்பது மாபெரும் கடல். நீந்தி களிக்க நிறைய உண்டு. அந்த கடல் பற்றி எளிய அறிமுகமாக உள்ளது இந்த நூல். நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வெற்றி உன் கையில்

வெற்றி உன் கையில், டாக்டர் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலைரூ.290 சுயமுன்னேற்றத்தை துாண்டும் நுால். சாதனைகள்புரிய ஆரோக்கியம் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. தினமும் அதிகாலை உடற்பயிற்சி, தியானம் பழகினால் தன்னம்பிக்கை வளரும். கடின உழைப்பும், நாணயமும் வளரும். தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டி என்றெல்லாம் அறிவுரைத்துள்ளார்.காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்களின் வரலாற்றையும் சுருக்கமாக எழுதி இருக்கிறார்.புகழும், செல்வ வளமும் பெறும் வழிமுறையை சொல்லும் நுால். – எஸ்.குரு நன்றி:தினமலர், 16/8/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029577_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

திருவாய்மொழி

திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ. ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல், ‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய […]

Read more
1 3 4 5 6 7 8