தமிழகக் கலைகள்
தமிழகக் கலைகள், மா. இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலை ரூ.100.
ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார்.
நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல செய்திகளை மனம் கவரும் வகையில் கூறுகிறது. கலைகளில் ஈடுபாடு கொள்ளச் செய்வதாக அமைகிறது. கலைகளை தாங்கியுள்ள இந்த நுாலை தமிழன்னை மகிழ்வுடன் ஏற்பாள்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்.
நன்றி:தினமலர், 26/7/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030646_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818