தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ. இராகவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 168, விலை 160ரூ.

தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு, கடல் கடந்து சென்ற இந்தியக் கலைகள், சாவகத்தில் உண்டான கலை வளர்ச்சி எனத் தமிழகக் கலையும் தமிழர்களோடு பயணித்த வரலாறும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
கட்டடக்கலை, சிற்பக்கலை, சமயம், கூத்து எனப் பல கலைகளில் தமிழர்களுடன் சாவர்கள் ஒத்துள்ள தன்மையை இந்நுால் வெளிக் கொணர்ந்துள்ளது. தமிழகம் உலக மக்களின் தாயகம். தமிழர்களுக்கு உலகிலுள்ளோர் யாவரும் உறவினர் என்பதும், தமிழர் தாம் சென்ற இடங்களில் எல்லாம் தங்கள் சமயத்தையும், கலையையும், பண்பாட்டையும் பரப்பினர் என்பதை விளங்குகிறது.

தமிழரின் தொன்மை, பெருமை, ஒன்றுபட்டு வாழ்ந்துள்ள சகோதரத்துவத்தை காட்டுகிறது. தமிழரின் பெருமையை அறிய விழையும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாகும்.

– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

நன்றி:தினமலர், 20/9/20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *