திருநெல்வேலி சுவைமிகு சைவ உணவு வகைகள்

திருநெல்வேலி சுவைமிகு சைவ உணவு வகைகள், எஸ்.செல்லம்மாள், ழகரம் வெளியீடு, விலைரூ.120 வாழ்க்கையின் ஜீவாதாரம் உணவு. உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி பேசுகிறது இந்த நுால். திருநெல்வேலி வட்டாரத்தில் பிரத்யேகமாக செய்யும் உணவு வகைகளின் செய்முறை எளிமையாக தரப்பட்டுள்ளது. மொத்தம், 105 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி பகுதியில், ஆரோக்கியமாக வாழ உதவும் குறிப்புகளும் உள்ளன. வெள்ளை சர்க்கரையை ஒதுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பு உள்ளது. சுவையான உணவு வகைகளின் செய்முறை கூறும் நுால். நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

உள்ளங்கையில் ஐம்பது வானம்

உள்ளங்கையில் ஐம்பது வானம், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக் 168, விலை 150ரூ. கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் குரலாக வெளிப்படுகிறது. பெண் என்னும் பெருந்தவத்தின் மகிமைகளையும், வீறுணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ஆழமாக உணர்த்தும் கவிதைகள் அலங்கரிக்கின்றன. பெண்கள் எல்லாவித முன்னேற்றத்திற்கும், புரட்சிகர சிந்தனைக்கும் தயார்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்படியான கவிதைகள் வரவேற்புக்கு உரியன. – ராம.குருநாதன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ. கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more