என்ட அல்லாஹ்
என்ட அல்லாஹ், தொகுப்பு: ஏபிஎம்.இத்ரீஸ், ஆதிரை வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: 180
இலங்கை உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்தப் போர், 2009-ல் அதன் உச்சம் தொட்டது. இலங்கையிலிருந்து உலகம் முழுக்க நிலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் பலரும் போரின் விளைவுகள் குறித்துக் காத்திரமாகத் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
தமிழ் இலக்கியம் உலகம் முழுக்கப் பரவியதற்கு ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட போருக்குப் பிறகும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீசிவிடவில்லை. அதிலும், ஈழம் தொடர்பான உரையாடல்களில் முஸ்லிம்களின் வாழ்க்கை பிரத்யேகமான கவனம் பெற்றதில்லை.
இவர்கள் சிறுபான்மையினரினும் சிறுபான்மையினராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த வகையில், ‘என்ட அல்லாஹ்’ என்ற பெயரில் ஏபிஎம்.இத்ரீஸ் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான வரவாகிறது. இந்தத் தொகுப்பானது போரின் காரணமாக மும்முனைத் தாக்குதலை எதிர்கொண்ட முஸ்லிம்கள் பற்றிய உரையாடலை நிகழ்த்துகிறது என்ற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 10/10/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030713_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818