சேக்கிழாரின் பெரியபுராணம்
சேக்கிழாரின் பெரியபுராணம், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில், பா.க.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 344, விலை 360ரூ.
நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் – 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில். 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்த சோதனைகள், அந்த சோதனையைத் தாண்டி அவர்களின் இறைபக்தியை ஊரறியச் செய்து ஆட்கொண்ட விதம் ஆகியவற்றை நுாலாசிரியர் விளக்குகிறார்.
நாயன்மார்கள் மீதான சிவபெருமானின் அளவு கடந்த பக்தியை கேள்விப்பட்டு, ரமண மகரிஷியும் அது போன்று கடவுளின் கருணை தனக்கு வேண்டும் என்று வேண்டியது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சிவபக்தர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
– எம்.எம்.ஜெ.,
நன்றி:தினமலர், 20/9/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818