தலித் பண்பாடு
தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ.
சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது.
தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது.
பெரிய புராணம் எடுத்துக்காட்டும் சாதிய கட்டமைப்பின் மேல், கீழ் தன்மையும், அதில் இடம்பெறும் ஆதிக்கமும், ஒளிவு மறைவின்றிக் காட்டப்பட்டுள்ளது. சங்க காலம் துவங்கித் தற்காலம் வரை, இலக்கியங்கள், தலித் மக்களை எப்படி வெளிப்படுத்தியுள்ளன என்பதையும் வெளிப்படுத்துகிறது. தலித் மக்கள் பற்றியும் தலித் அரசியல், தலித் இலக்கியம் பற்றி அறிவூட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 11/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818