அவனது நினைவுகள்
அவனது நினைவுகள், யூமா. வாசுகி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ.
ஒரு ஓட்டல் வாசலில் எச்சில் இலையை போடும் தொட்டியின் அருகே நாய்களுடன் சேர்ந்து எஞ்சிய சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறான் ஒரு ஆதரவற்ற சிறுவன். அவனுக்கு பெயரும் இல்லை. பெற்றோர் யார் என்று தெரியாது. சற்று வளர்ந்ததும் ரிக்க்ஷா ஓட்டிப் பிழைக்கும் அவன் ரிக்க்ஷாவில் பயணிக்கும் விபசாரிகளின் அறிமுகம் கிடைப்பதால் புரோக்கராக மாறுகிறான். அப்போது சில வியாபாரிகளின் பழக்கம் கிடைத்ததும் அவர்களுக்காக அடியாளாகவும் மாறுகிறான். இப்படி வளர்ந்து வரும் அவன் ஒரு வியாபாரிக்காக செய்யாத கொலைப்பழியை ஏற்று சிறை செல்கிறான். இப்படி ஆதரவற்ற ஒருவனது வாழ்க்கையையும் விலைமாதர்களின் பாடுகளையும் யதார்த்தமாக கூறியிருக்கிறார் கதை ஆசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை, சாகித்ய அகாடமி, பத்மபூஷன், ஞனபீடம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சிவசங்கர்ப்பிள்ளை கேரளாவை சேர்ந்தவர், இவரது நூலை யூமா. வாசுகி தமிழில் நேரடி நூல் என்ற அளவுக்கு நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார்.
—-
மந்திர சாவி, நாகூர் ரூமீ, கல்கி பதிப்பகம், 47, என்.டி.ஜவகர்லால்நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 45ரூ
நம்முள் மறைந்து இருக்கும் ஆற்றல்களைப் புரிந்து கொண்டு, அதை வெளிக்கொண்டு வரும் முறைகளை இந்த மந்திரச்சாவி என்னும் நூல் விளக்குகிறது. தன்னம்பிக்கை ஊட்டும் நூல்.
—-
பொது அறிவுப் பெட்டகம், மயிலை மாதவன், மீனாட்சி பிரசுரம், 661, ராமநாதன் நகர், பாலசமுத்திரம் ரோடு, பழநி 624 601, விலை 75ரூ.
பொது அறிவுத் தகவல்கள், ஆச்சரியமான தகவல்கள் அடங்கிய புத்தகம். குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 3/7/2013