நெஞ்சில் ஒளிரும் சுடர்
நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, காலச்சுவடு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-188-1.html தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம். தன் கணவர் மீது பேரன்பையும், பெருங்காதலையும் எழுத்தாக்கி உள்ளார் கமலா ராமசாமி. துவக்கத்தில் வெகுளித்தனமாக இருந்து நம் காலத்தின் மிக பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும், அமைதியான விந்தையை இயல்பாக பதிவு செய்த விதத்தில் நூல் நம் கவனத்தை கவர்கிறது. மொத்தம் 160 பக்கங்களுடன் நூல் வெளிவந்து இருக்கிறது. கன்னிமாரா நூலகத்தில் இதை படித்து பயன்பெறலா ம்.
நன்றி: தினமலர், 7/7/13.
—-
பண்டிகையைக் கொண்டாடுவோம், ஆர். ராதாகிருஷ்ண சர்மா, வானவில் புத்தகாலயம், பக்.128, விலை 80ரூ.
பண்டிகைகள் கொண்டுவதன் நோக்கம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கூடி மகிழவும், இறைவனை வேண்டுவதற்கும், வணிகம் பெருகுவதற்கும், உழைப்பிற்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளவும் என்று, பலவித நன்மைகளைக் கூறலாம். இந்நூலில் விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், வரலட்சுமி விரதம் என்று பல பண்டிகைகளை ஏன்? எதனால்? எப்படி? என்றெல்லாம் விளக்கப்பட்டுள்ளன. -டாக்டர் கலியன் சம்பத்து, நன்றி: தினமலர், 7/7/13.