சிவமூர்த்திகள் 64
சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு ஈ. மணி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 250ரூ.
சிவபெருமான் 64 மூர்த்திகளாக தோன்றி அருள் புரிந்த விவரங்கள் அடங்கி உள்ளன. தற்கால உலகிற்கு இந்த 64 மூர்த்திகளும் எதை உணர்த்துகிறார்கள் என்பதை சிறு சிறு சான்றுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.சிவ பக்தர்களுக்கு உதவும் நூல்.
—-
செட்டிநாட்டு சமையல் (101 சைவ அசைவ வகைகள்), ஜே.எஸ். குமாரி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 9, வேம்புல அம்மன் கோவில் 2வது தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 100ரூ.
தாமாகவே சமைக்க விரும்பும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் பயன்படும் நூல்.
—-
கல்வி பற்றிய சட்டங்கள், டாக்டர். சோ.சேசாச்சாலம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
தமிழக அரசு, கல்வி பற்றி பல முக்கிய சட்டங்களை இயற்றி இருக்கிறது. இலவசமாக கட்டாய கல்வி அளிப்பது பற்றிய சட்டமும், பள்ளியில் சேர்ப்பதற்க கட்டாயமாக நன்கொடை வசூலித்தால், 10 மடங்கு அபராதம் விதிப்பதற்கான சட்டமும் முக்கியமானவை. இதுபற்றி தமிழக அரசின் இலவச மற்றும் கல்வி கட்டணங்கள் பற்றிய சட்டங்கள் என்ற தலைப்பில் சட்ட நிபுணர் சோ.சேசாச்சலம், எழுதியுள்ள புத்தகம் மிகப் பயனுள்ளது. நன்றி: தினத்தந்தி, 3/7/2013