பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. நெஞ்சை அள்ளும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பல்வேறு பகுதிகளைச் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம், காப்பியத்திறன் என அனைத்தையும் எளிய தமிழில், இனிய நடையில் பதம் பிரித்து, இதமாய்த் தந்திருக்கும் புத்தகம். படிக்கப் படிக்க சிலம்பின் சிறப்பு மனதுக்குள் மகுடமாய் உயர்கிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027591.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

உரைவேந்தர் ஔவை துரைசாமி

உரைவேந்தர் ஔவை துரைசாமி, பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. ஓலைச் சுவடிகளில் உறங்கிய தமிழை தேடி எடுத்துத் தெsளிவுரை எழுதி, உரைநடையாக்கி உலகறியச் செய்த அக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் தனித்திறன் பெற்று உரைவேந்தர் எனப் போற்றப்பட்ட ஔவை துரைசாமியின் உரைநயம் உரைக்கும் புத்தகம். சுவைத்துணர வேண்டிய தமிழ்ச்சுவை. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

படித்தாலே இனிக்கும்

படித்தாலே இனிக்கும், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள், நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகள், கலை. இலக்கியம், இசை, நாடகம் என்று பன்முக நோக்கில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், அருட்செல்வர், நா. மகாலிங்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரனார், ஏர்வாடியார் என்று பலரின் ஆளுமையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் நூல்களை தேடிப்பிடித்து படிக்க வைக்க உதவும் கட்டுரைகள் இவை. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more