இதழியல் மேலாண்மை
இதழியல் மேலாண்மை (சி.பா.ஆதித்தனார்), கவிஞர் சுரா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 90ரூ.
இதழியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியவர், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”. பாமரர்களையும் படிக்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எழில்மிகு நடையில், சுவைபட எழுதியுள்ளார் முனைவர் கவிஞர் சுரா.
இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என்று சொல்லத்தக்க வகையில் நூலை கவிஞர் சுரா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தனார் நிறுவிய ‘தினத்தந்தி’, 75 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு, பவள விழா கொண்டாடும் நேரத்தில் இப்புத்தகம் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
நன்றி: தினத்தந்தி, 1/11/2017.