திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்), மறைமலையடிகள், சிவாலயம் வெளியீடு, பக். 432, விலை 280ரூ. திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். ;சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இது புதுமாரியான புதினம். இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் வதனா. இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இறுதியில் சென்று வா உறவே சென்று வா என்று காதலிக்கு விடை கொடுக்கும் தமிழமுதன் கண்ணீரோடு பிரிந்துவிடுகிறான். இந்தக் காதல் தொடரில் இலக்கியம், அறிவியல், பொதுவுடமை, தத்துவம், புராணம், வரலாறு என பல செய்திகளையும் கவிஞர் தியாரூ கலந்து கொடுத்திருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. காதலைப் பற்றி நிறைய கதைகள் வெளியாகி இருக்கலாம். […]

Read more

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ. சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் […]

Read more

வனமிழந்த கதை

வனமிழந்த கதை, கே. ஸ்டாலின், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 87, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-425-9.html உணர்ச்சிகளில் இருந்து தப்பிச்செல்ல முயலும் ஒவ்வொரு கவிஞனும், உணர்ச்சிகளில் இருந்துதான் தன் கவிதையைத் தொடங்கியாக வேண்டும். இப்படியான ஒரு அனுபவத்தையே கே. ஸ்டாலின் இக்கவிதைகள் உணர்த்துகின்றன. கவித்துவமும் மனிதத் தன்மையும் ஒருவகையில் உணர்ச்சிகளின் தூண்டுதலில் இருந்தே அடையாளம் காணப்படுகின்றன. திருவிழாவின் குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கும் பைத்தியமொன்றின் கைகளில் கிடைக்கக்கூடும் யாரோ யாருக்கோ அன்பொழுகத் தந்து தவறிப்போன சிறுபரிசொன்று என்ற கவிஞரின் […]

Read more

திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2

திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2, சிவாலயம் ஜெ.மோகன், சிவாலயம் வெளியீடு, சென்னை, பக். 772, 586, விலை 650, 500ரூ. மரபை பின்பற்றி புதிய பதிப்பு To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-0.html அகத்தே கறுத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும், சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட இறைவனால், இந்த உலகிற்கு வருவிக்க உற்ற அருளாளர் வள்ளல், ராமலிங்க அடிகள் இயற்றிய, 5818 பாடல்களை, இந்த பதிப்பாசிரியர் முந்தைய பதிப்பாளர்களை ஆதாரமாக கொண்டு, அழகுற பதிப்பித்துள்ளார். சைவ திருமுறைகள் […]

Read more

தஞ்சைப் பெரிய கோயில்

தஞ்சைப் பெரிய கோயில், வி.அ. இளவழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிந்ததே. சைவ சமய இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட சிவ தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை, தான் மொழி பெயர்த்த திருவாசக நூலின் முன்னுரையில் ஜி.யு.போப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு நம் கோயில்களின் அருமை பெருமைகள் தெரிந்துள்ள அளவு தமிழ்நாட்டவர்க்குத் தெரியவில்லை என்பது கவலைக்குரியது. […]

Read more