திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்), மறைமலையடிகள், சிவாலயம் வெளியீடு, பக். 432, விலை 280ரூ. திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். ;சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது […]

Read more

மறைமலையம்

மறைமலையம், மறைமலையடிகள், தமிழ்மண் பதிப்பகம், விலை 14,260ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டில், மறைமலை அடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் ‘மறைமலையம்’ என்னும் பெயரில் 34 தொகுதிகளை கொண்ட புத்தகத்தை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருக்குறள் ஆராய்ச்சி, மாணிக்கவாசகரின் வரலாறும் காலமும், திருவாசக விரிவுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி இந்நூல் வந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு நெறியாளர்களுக்கும், மறைமலை அடிகளாரின் ஆய்வு நெறி பண்பாட்டை அறிவதற்கும் இந்நூல் உதவும். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை, மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை 17, பக். 192, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-701-7.html மறைமலையடிகள் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் இந்நூலாசிரியர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மறைத் திரு சுவாமி வேதாசலம் ஆவார். அன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு இப்போதும் பலரால் பாராட்டப்படுகிறது. இவர், மரணத்திற்குப் பின் மனிதர் நிலை என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். கடவுளும் இல்லை. ஆத்மாவும் இல்லை. […]

Read more