இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரேன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.

இலங்கை மலேசியத் தமிழராக ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மஹாலிங்கம் சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். 1939ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மஹாலிங்கத்திற்கு சிறுவயது முதலே நேர்மறைச் சிந்தனைகளும், வெற்றி கிடைக்கம் வரை அயராது முயற்சி செய்யும் பண்பும் இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வசிக்க இயலாத மலையாக இருந்த ஸ்பிரிங் பீல்ட் மலையில் 2860 ஹெக்டேர் நிலத்தை வாங்கி அவற்றின் இயற்கையைப் பாதுகாத்து அதை மக்கள் வசிப்பதற்கு உகந்த மிகச்சிறந்த நகரமாக மாற்றி சாதனை புரிந்திருக்கிறார் அவர். ஒருவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய இனம், மதம், ஏழ்மை, பிறந்த நாடு ஆகியவை தடையாக இருப்பதில்லை என்பதற்கு மஹாலிங்கம் சின்னத்தம்பியின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 13/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *