நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள்
நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், பக். 176,விலை 270ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024551.html மோடிக்கு பிடித்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் நரேந்திர மோடி பற்றி, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய நூல். மோடியைப் பற்றிய 160 செய்திகளை கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரானது, தொழில் துறையினருக்கு ஆதரவானது என்பது குற்றச்சாட்டு. குஜராத்தில் 1960லிருந்து 2000ம் ஆண்டு வரையில், சொட்டு நீர் பாசனம் நிலம், 12 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. கடந்த, 2103ல் அது, 9 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது (பக். 30). நாட்டின் விவசாய துறை வளர்ச்சி, 20 சதவீதமாக இருந்த கடந்த, 10 ஆண்டில் குஜராத் மாநில விவசாய துறை வளர்ச்சி, 9.8 சதவீதம் (பக். 77). விவசாயம் என்பதில், கால்நடையும் சேர்த்தி. கால்நடைகளுக்கும், ஹெல்த் கார்டு எனும் சுகாதார அட்டை, இலவச சிகிச்சை, கண்புரை நீக்குதல் ஆகியவை செய்யப்படுகின்றன (பக்.59). மண் பரிசோதனை செய்யப்பட்டு, தரமும், குணமும் அடையாளம் காணப்பட்டு, அதில் எந்த பயிரை வளர்த்தால் லாபம் என்பதை கூறும் மண் மதிப்பீட்டு அட்டை (பக். 125). வீட்டிற்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைக்கும் தேவையானது மின்சாரம். உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சார பூங்கா, 2000 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்பட்டு, தினசரி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது (பக்.44). முஸ்லிம்கள் பற்றி கணிசமான செய்திகள் உள்ளன. அரசு வேலையில், 11 சதவீதம், காவல்துறையில் 12 சதவீதம் முஸ்லிம்கள். ஆளும் மாநிலங்களை விட, குஜராத்தில் சிறையில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு (பக். 138). கல்வியில் முஸ்லிம்களின் முன்னேற்றம் என, பல தகவல்கள் உள்ளன. பஸ் ராப்பிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (பி.ஆர்.டி.எஸ்.,)பற்றி இப்போதுதான், தமிழகத்தில் யோசிக்க துவங்கியுள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே அது குஜராத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, வரவேற்பும் அதிகரித்து வருகிறது (பக். 153). நேர்த்தியாக உடை அணிவதில், எப்போதும் மோடிக்கு விருப்பம். பலரும் கவனிக்கத்தக்க விதத்தில் உடையணிவார் (பக். 17). பிரசாரத்தின்போது அவர் காரில் பல வண்ண மேல் துண்டுகள் ஒரு டஜன் இருக்கும். மேற்கத்திய கைக் கடிகாரங்களில் மோடிக்கு விருப்பம் (பக். 64) என, அவரது தனிப்பட்ட விருப்பங்களை தெரிவிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், அவரது சிந்தனை சுதேசிதான் என்பதை தெளிவாக்குகிறார். படிக்க சுலபமாக, சின்ன சின்ன செய்திகள். பல வண்ண புகைப்படங்கள். சிறிய ஆனால் சீரிய நூல் இது. -திருநின்றவூர் ரவிக்குமார். நன்றி: தினமலர், 6/9/2015.