நல்லவங்க அரசியலுக்கு வாங்க
நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ.
இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு ஆகியன பற்றியும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் முனைவர் எஸ். வெங்கடராஜலு. அரசியலை தூய்மைப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
வண்டல் உணவுகள், சோலை சுந்தரபெருமாள், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ.
தஞ்சாவூர் மாவட்டத்தின் உணவுப் பண்பாடு குறித்து எழுதப்பட்ட நூலாகும். இதில் தன்னிறைவு கொண்ட சுயமான வாழ்வை முதலாளித்துவம் பறித்து, சீரழித்துள்ளதையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.