நல்லவங்க அரசியலுக்கு வாங்க
நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ.
சமகால அரசியல் வரலாற்றை விளக்குவதும் பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நோக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னலமற்ற தொண்டாற்றி அரசியலில் நேர்மையுடன் வாழ்ந்த தமிழகத் தலைவர்களின் பொது வாழ்க்கை வழி சமகால அரசியல் அலசப்பட்டுள்ளது. அடுத்தாக, நாட்டில் நல்லாட்சி நிலவ ஊடகங்களின் பங்கு எத்தகையது என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபடுவோரின் தகுதிகள், பணிகள், தேவையான சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைப்பது நாட்டிற்கு நன்மை சேர்ப்பதாக உள்ளது. அரசியல் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 23/11/2015.