ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 420ரூ.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜி.எஸ்.டி.” வரி பற்றி முப விவரம் அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஜி.எஸ்.டி. பற்றி பொதுமக்களிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 501 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தகவல் களஞ்சியங்களை வெளியிட்டு வரும் வடகரை செல்வராஜ் உருவாக்கியுள்ளார்.
“ஜி.எஸ்.டி.” பற்றிய சந்தேகங்களை போக்கும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கேள்வி – பதில்கள் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.