பூமியைச் சுற்றிப் பாருங்கள்

பூமியைச் சுற்றிப் பாருங்கள்,  பத்ஹுர் ரப்பானி,  செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், பக்.426, விலை ரூ.250.   1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more