சிறுகாப்பியங்களில் திருக்குறள்
சிறுகாப்பியங்களில் திருக்குறள், ச.தண்டபாணி தேசிகர், லட்சுமி பதிப்பகம், விலைரூ.60
திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில் சொல்லப்பட்ட திருக்குறளின் கருத்துக்களை, எடுத்துக்காட்டு பாடல்களுடன் விளக்கிச் சொல்கிறது.
இந்நுாலில் காப்பியங்களில் திருக்குறள், சூளாமணியில் வள்ளுவம், நீலகேசியில் வள்ளுவம், உதயணகுமார காவியத்தில் வள்ளுவம், யசோதர காவியத்தில் வள்ளுவம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து உள்ளன.
தமிழ் சிறு காப்பியங்களில் கதையையும், அதனுள் கூறப்பட்டுள்ள திருக்குறள் கருத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 31/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818