சிறுகாப்பியங்களில் திருக்குறள்

சிறுகாப்பியங்களில் திருக்குறள், ச.தண்டபாணி தேசிகர், லட்சுமி பதிப்பகம், விலைரூ.60 திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில் சொல்லப்பட்ட திருக்குறளின் கருத்துக்களை, எடுத்துக்காட்டு பாடல்களுடன் விளக்கிச் சொல்கிறது. இந்நுாலில் காப்பியங்களில் திருக்குறள், சூளாமணியில் வள்ளுவம், நீலகேசியில் வள்ளுவம், உதயணகுமார காவியத்தில் வள்ளுவம், யசோதர காவியத்தில் வள்ளுவம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து உள்ளன. தமிழ் சிறு காப்பியங்களில் கதையையும், அதனுள் கூறப்பட்டுள்ள திருக்குறள் கருத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. – ராமலிங்கம் நன்றி: தினமலர், 31/1/21 […]

Read more

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?, எம்.கே.நடராஜன், லட்சுமி பதிப்பகம், விலைரூ.200 பர்மாவில், இரண்டாம் உலகப் போர் அனுபவத்துடன் துவங்குகிறது புத்தகம். வாழ்க்கையை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. போரற்ற, நோயற்ற நிலை நோக்கி நகர துாண்டும் தொகுப்பு நுால். புத்தகத்திலிருந்து… பர்மா நாட்டில், மீங்கேயில், 1940ல் வசித்தோம். தமிழரை, ‘கள்ளா’ என்று அழைப்பர். பள்ளியில், 5ம் வகுப்பில் இருந்தேன். பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்தன. தலை தெறிக்க ஓடினோம். 40 ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. அன்று மூடிய பள்ளி திறக்கவேயில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பர்மாவை விட்டு வெளியேற […]

Read more