திருக்குறளுக்கு புதிய உரை
திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய தமிழில் அமைந்துள்ளது. குறிப்பாக மாணவர்களக்கு இந்த நூல் மிகவும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.
—-
அன்புமாலை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 24ரூ.
இதுவரை அச்சில் வராமல் இருக்கும் வாரியார் சுவாமிகளின் பாடல்களை தேடிக்கண்டுபிடித்து, புத்தகங்களாக வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட, அருணகிரி நாதர் பற்றிய 36 பாடல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. பாடல்களுக்கு பொழிப்புரை, அருஞ்சொற்களுக்குப் பொருள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.